Fox Hill Supercross நிகழ்விற்கு HUTCH வலுவூட்டியுள்ளது

இலங்கையில் அதிவேகமாக வளர்ச்சி கண்டு வருகின்ற மொபைல் புரோட்பான்ட் வலையமைப்பான HUTCH தொடர்ந்து 9 ஆவது ஆண்டிலும் Fox Hill Supercross இன் பிரதான அணுசரனையாளராக அதனுடன் கைகோர்த்துள்ளது.

மோட்டார் பந்தய வீரர்களின் திறன் மற்றும் மன வலிமை ஆகியவற்றைச் சோதிக்கும் 27 ஆவது Fox Hill Supercross இலங்கை இராணுவ அக்கடமியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Hutchison Telecommunications Lanka நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான திருக்குமார் நடராசா அவர்களிடமிருந்து பிரதான அணுசரனையை தியத்தலாவ இலங்கை இராணுவ அக்கடமியின் கட்டளைத் தளபதியான பிரிகேடியர் எஸ்.கே. ஈஷ்வரன் USP, PSC, HDMC அவர்கள் பெற்றுக்கொள்வதை படத்தில் காணலாம்.

அத்துடன் சிரேஷ்ட தமிழ் பயிற்றுனரும், Fox Hill Supercross அணுசரனை ஏற்பாட்டுச் சபை அங்கத்தவருமான திரு. ஏ. எஸ். அஸீம், துணைக் கட்டளைத் தளபதி பிரிகேடியர் கே.எச்.கே. கொட்டவத்த RWP, RSP, USP மற்றும் மேஜர் றோஹண உடரட்டகே ஆகியோரும் படத்தில் காணப்படுகின்றனர்.

காதலர் தின பருவ காலத்தில் Hutch இடமிருந்து வாடிக்கையாளர்களுக்கு சலுகைகள்

காதலர் தினத்தை முன்னிட்டு பெப்ரவரி மாதத்தில் Hutch ஸ்ரீ லங்கா விசேட ஊக்குவிப்புத் திட்டமொன்றை தனது வாடிக்கையாளர்களுக்காக முன்னெடுத்திருந்தது. அன்பை கொண்டாடும் வகையில், Hutch call pack களை செயற்படுத்திய வாடிக்கையாளர்களுக்கு சுவை நிறைந்த இரவு உணவு வேளையை Pizza Hut இடமிருந்து வெற்றியீட்டுவதற்கான வாய்ப்பை Hutch வழங்கியிருந்தது. இதனூடாக காதலர் தினத்தை மேலும் விசேட தினமாகவும், நினைவில் நிலைத்திருக்கும் தினமாகவும் அமைந்திருக்க வழிகோலியது. இந்த பருவ காலப்பகுதியில் இணைந்து கொண்ட புதிய மற்றும் ஏற்கனவே காணப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு, இந்த விசேட ஊக்குவிப்புத் திட்டத்தில் பங்கேற்பதற்கான விசேட வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. 2,500 ரூபாய் பெறுமதி வாய்ந்த இந்த Pizza Hut வவுச்சர்களை வெற்றியீட்டுவதற்கு வாடிக்கையாளர்கள் Hutch call pack களை செயற்படுத்த வேண்டியிருந்தது. வாடிக்கையாளர்களின் தேவைகளை நன்கறிந்து சேவைகளை வழங்கும் Hutch, காதலர் தினம் மற்றும் அன்பை பகிர்ந்து கொள்ளும் மாதம் முழுவதும் தமது அன்புக்குரியவர்களுடன் தொடர்பை பேண விசேட கட்டணங்களை வழங்கியிருந்தது. இந்த திட்டம் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டமை தொடர்பில் Hutch சந்தைப்படுத்தல் தலைமை அதிகாரி ஹம்தி ஹஸன் கருத்துத் தெரிவிக்கையில், ´உறவுகளை பேணுவதில் மொபைல் முக்கிய பங்கை வகிக்கின்றன. வருடம் முழுவதிலும் வாடிக்கையாளர்களுக்கு வெகுமதிகளை வழங்குவதில் Hutch புகழ்பெற்றுத் திகழ்கிறது. காதலர் தினத்துக்கான எமது ஊக்குவிப்புத் திட்டத்தினூடாக, Hutch தமது வாடிக்கையாளர்களை தமது அன்புக்குரியவர்களுடன் இணைப்பில் பேணி அன்பை பகிர்ந்து கொள்ளும் காலத்தை மனம்மறவாத வகையில் கொண்டாட வழிகோலியிருந்தது.´ என்றார். வாடிக்கையாளர்களின் தேவைகள், செயற்பாடுகள் மற்றும் மாறுபட்ட கவனயீர்ப்புகளை நிவர்த்தி செய்யும் வகையில் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளில் மற்றுமொரு அங்கமாக இந்த ஊக்குவிப்புத் திட்டம் அமைந்திருந்தது. வவுச்சர் வெற்றியீட்டியிருந்த ஜனக ஜயந்த கருத்துத் தெரிவிக்கையில், ´எனக்கு உண்மையில் மகிழ்ச்சியாகவுள்ளது. இதுவே வெற்றியீட்டும் முதல் சந்தர்ப்பமாக அமைந்துள்ளது. இந்த இனிய அன்பளிப்பை வழங்கியமைக்காக நான் நிறுவனத்துக்கு நன்றி தெரிவிக்கிறேன்.´ என்றார். மற்றுமொரு வெற்றியாளரான ருவன் துஷார திஸாநாயக்க கருத்துத் தெரிவிக்கையில், ´பத்து ஆண்டுகளுக்கு மேலாக வலையமைப்புடன் நான் இணைந்துள்ளேன். இதுபோன்றதொரு அன்பளிப்பை என்னால் வெற்றியீட்டக்கூடியதாக இருக்குமென நான் ஒரு போதும் கருதியதில்லை. இந்த சிறந்த வலையமைப்புடன் தொடர்ந்தும் நான் இணைந்திருப்பேன்.´ என்றார். நாட்டு மக்கள் இணைப்பில் இருப்பதுடன், உயர் மொபைல் தீர்வுகளை பெற்றுக் கொடுக்கும் நோக்குடன் இயங்கும் Hutch ஸ்ரீ லங்கா, தனது வலையமைப்பை நாடு முழுவதிலும் படிப்படியாக 4பு வலையமைப்பாக விஸ்தரித்த வண்ணமுள்ளது. வெகுமதியை பெற்றுக் கொண்ட Hutch வாடிக்கையாளர்களில்;: கே.டபிள்யு.ஏ. சவினு ஜயதிலக, டபிள்யு.ரி. பிரதீப் தர்மசிறி, ருவன் துஷார, ஷெஹாரா சுமுது, கமில சதுரங்க, ஜனக ஜயந்த, கே.டி. திலகரத்ன, சதுனி பெர்னான்டோ, கே. எரந்திகா மதுமாலி, ஐ.பி. லக்மால் புஷ்பகுமார, நதீஷா ருவந்தி ஹெகொடகமகே, ஏ.எல். ருசெய்ன் மொஹமட், டி.எம். நயன மஞ்சுள துனுகர, கே.எம். மதுஷ் கசுந்தக தில்ஷான், டபிள்யு.பி.டி. பெர்னான்டோ, டி. சஞ்ஜீவ சமன் குமார மற்றும் கே.ஜி.ஏ. நிசன்சலா சஞ்ஜீவனி. ஆகியோர் அடங்கியிருந்தனர்.

115 மில். அமெரிக்க டொலர் முதலீட்டுக்கு Hutch மற்றும் முதலீட்டு சபை உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை முதலீட்டு சபையுடன் Hutchison Telecommunications லங்கா (பிரைவட்) லிமிடெட் மேலதிக உடன்படிக்கையொன்றில் 2019 பெப்ரவரி 11ஆம் திகதி கைச்சாத்திருந்தது.

Hutchison Telecommunications லங்கா (பிரைவட்) லிமிடெட் பிரதம நிறைவேற்று அதிகாரி திருகுமார் நடராசா மற்றும் இலங்கை முதலீட்டு சபையின் தலைமை அதிகாரி ஹேமசிறி பெர்னான்டோ ஆகியோர் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருந்தனர். கொழும்பில் அமைந்துள்ள முதலீட்டு சபையின் தலைமையகத்தில் இடம்பெற்ற இந்த கைச்சாத்திடும் நிகழ்வில் அதன் பணிப்பாளர் நாயகம் திருமதி. சம்பிகா மலல்கொடவும் கலந்து கொண்டார்.

Hutchison Telecommunications லங்கா (பிரைவட்) லிமிடெட் இலங்கையில் சுமார் இரண்டு தசாப்த காலப் பகுதிக்கு மேலாக இயங்கி வருவதுடன், ஹொங் கொங்கை தளமாக கொண்டியங்கும் Fortune 500 நிறுவனமான C K Hutchison நிறுவனத்தின் துணை நிறுவனமாகவும் இயங்குகிறது.
தனது வலையமைப்பை உறுதி செய்யும் வகையில், Hutchison லங்கா அண்மையில் எடிசலாட் லங்கா (பிரைவட்) லிமிடெட்டுடன் ஒன்றிணைந்துள்ளதுடன், புதிய வர்த்தக நாமமான Hutch இன் கீழ் எதிர்வரும் காலத்தில் இயங்கும்.
நிறுவனத்தின் விஸ்தரிப்பு நடவடிக்கைகள் தொடர்பாக நடராசா தெரிவிக்கையில், ‘இரு வலையமைப்புகளை ஒன்றிணைத்துள்ளதனூடாக, உருவாக்கப்பட்டுள்ள வியாபாரத்தினூடாக இலங்கையின் வாடிக்கையாளர்களுக்கு கிராமிய மற்றும் நகர மட்ட வலையமைப்பில் பெருமளவு மேம்படுத்தல் ஏற்படுத்தப்படும். சகல வாடிக்கையாளர்களுக்கும் வழங்கப்படும் தொடர்பாடல்கள் சேவைகள் தொடர்பில் புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.’ என்றார்.
அவர் மேலும் தொடர்ந்து தெரிவிக்கையில், “Hutch மேல் மாகாணத்தில் 4G சேவைகளை அண்மையில் அறிமுகம் செய்திருந்தது. நாடளாவிய ரீதியில் விஸ்தரிக்கும் நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. Hutch 4G வலையமைப்பினூடாக சகல வாடிக்கையாளர்களுக்கும் சிறந்த அனுகூலங்கள் மற்றும் சலுகைகள் கிடைக்கும்.’ என்றார்.
இலங்கையில் 4G சேவைகளை வழங்கும் மூன்றாவது சேவை வழங்குநராக Hutch இயங்கும். கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம், முதற் கட்ட முதலீடு 115 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். எதிர்காலத்தில் இந்தத் தொகை மேலும் அதிகரிக்கும் என நடராசா மேலும் நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.
இலங்கையின் அபிவிருத்தியில் தொலைத்தொடர்பாடல் துறையின் விஸ்தரிப்பு முக்கிய பங்கை வகிக்கிறது. தனிநபர்கள், வியாபாரங்கள் மற்றும் அரச ஸ்தாபனங்கள் ஆகியவற்றை இணைப்பதனூடாக தொடர்பாடல் நடவடிக்கைகளை வலுவூட்டுவதுடன், ஒரு இலங்கையாக எம் அனைவரையும் ஒன்றிணைக்கிறது.
இலங்கை முதலீட்டு சபைக்கு வெளிநாட்டு முதலீடுகள் கிடைக்கும் பிரதான துறைகளில் ஒன்றாக தொலைத்தொடர்பாடல்கள் துறை தரப்படுத்தப்பட்டுள்ளது.

Hutch அனுசரணையில் இராணுவ தட கள விளையாட்டுப் போட்டி நிகழ்வு

இலங்கையில் மொபைல் தொலைதொடர்பாடல்கள் சேவைகளை வழங்குவதில் அதிவேகமாக வளர்ச்சி கண்டு வருகின்ற HUTCH, அண்மையில் சுகததாச அரங்கில் வெற்றிகரமாக இடம்பெற்று முடிவடைந்த 55 ஆவது ‘இராணுவ படைப்பிரிவுகளுக்கு இடையிலான தட கள விளையாட்டுப் போட்டி’ நிகழ்விற்கு தொடர்ந்து இரண்டாவது ஆண்டாகவும் அனுசரணை வழங்குவதற்கு இலங்கை இராணுவத்துடன் கைகோர்த்துள்ளது. இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் நிறைவு வைபவத்தின் போது பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்திருந்தார்.

3 தினங்கள் கொண்ட இந்த வருடாந்த போட்டி நிகழ்வானது பல்வேறு தட கள விளையாட்டுக்களை உள்ளடக்கியுள்ளதுடன், இராணுவத்தின் அனைத்து 24 படைப்பிரிவு கட்டளையகங்களையும் சார்ந்த 900 வரையான தட கள வீரர்கள் இதில் பங்குபற்றியுள்ளனர். இப்போட்டியின் போது தட கள வீரர்களால் 2 புதிய தேசிய மட்ட சாதனைகளும், 12 புதிய போட்டி மட்ட சாதனைகளும் மற்றும் 4 புதிய இராணுவ தட களப் போட்டி மட்ட சாதனைகளும் நிலைநாட்டப்பட்டுள்ளன. சர்வதேச தட களப் போட்டிகளில் பதக்கங்களை வென்று நாட்டிற்கு பெருமை தேடித் தந்துள்ள 20 இற்கும் மேற்பட்ட தேசிய மட்ட தட கள வீரர்கள் நிகழ்வை நேரடியாக கண்டு களித்ததுடன், நாட்டில் இன்று மிகவும் பெயர்பெற்ற மற்றும் வளர்ந்து வருகின்ற இராணுவ தட கள வீரர்களும் அவர்களுடன் இணைந்து நிகழ்வை கண்டுகளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை ஆயுதப் படைகளால் ஏற்பாடு செய்யப்படுகின்ற பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் அடங்கலாக இலங்கையில் பிரபலமான உள்நாட்டு விளையாட்டு நிகழ்வுகளுக்கு அனுசரணை வழங்குவதில் முன்னிலை வகித்து வருகின்ற ஒரு நிறுவனம் என்ற நன்மதிப்பை HUTCH கட்டியெழுப்பியுள்ளது. வருடாந்தம் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்ற இந்த விளையாட்டு நிகழ்விற்கு தொடர்ந்து இரண்டாவது ஆண்டாகவும் இலங்கை இராணுவத்துடன் பங்காளராக இணைந்துள்ளதன் மூலமாக, உள்நாட்டில் விளையாட்டுத் துறையிலுள்ள திறமைசாலிகளை வளர்த்து, அவர்கள் தமது தட களத் திறமைகளை நிரூபித்து, வெளிக்காண்பிப்பதற்கு களம் அமைத்துக் கொடுப்பதில் HUTCH தனது அர்ப்பணிப்புடனான ஈடுபாட்டைத் தொடர்ந்தும் பேணிவருகின்றது.

3 தினங்களாக இடம்பெற்ற போட்டி நிகழ்வின் முடிவில், நடப்பு வெற்றியாளர்களான இலங்கை மின்னியல் மற்றும் இயந்திரவியல் பொறியியலாளர்கள் படைப் பிரிவானது ஆண்கள் பிரிவில் ஒட்டுமொத்த வெற்றியாளர்களாக வலம் வந்ததுடன், இலங்கை பீரங்கிப் படைப்பிரிவு மற்றும் கெமுனு வோச் படைப்பிரிவு ஆகியன முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்றுக்கொண்டன. பெண்கள் பிரிவில் நடப்பு வெற்றியாளர்களான 4(V) SLAWC படைப் பிரிவு மீண்டும் ஒரு முறை உச்ச ஸ்தானத்தை தனதாக்கியுள்ளது. ஏராளமான தட கள வீரர்கள் தமது பிரத்தியேக மற்றும் இப்போட்டி மட்டத்தில் முன்பு நிலைநாட்டியிருந்த சாதனைகளை முறியடித்துள்ளனர். ஆண்களுக்காக 4X200 மீ அஞ்சலோட்டப் போட்டியில் 1:24:03 என்ற நேரக் கணக்கிலும், ஆண்களுக்கான 4X800 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியில் 7:27:17 என்ற நேரக் கணக்கிலும் இலங்கை மட்டத்தில் புதிய சாதனைகள் நிலைநாட்டப்பட்டுள்ளமை இந்நிகழ்வில் விசேட அம்சமாக அமைந்துள்ளதுடன், இந்த இரு சாதனைகளையும் இலங்கை மின்னியல் மற்றும் இயந்திரவியல் பொறியியலாளர்கள் படைப் பிரிவே நிலைநாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

HUTCH Sri Lanka நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான திருக்குமார் நடராசா அவர்கள் இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில், “ஒட்டுமொத்த வரலாற்றை எடுத்துக் கொண்டால், தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் வெற்றிகளை ஈட்டியுள்ள நாட்டின் தலைசிறந்த விளையாட்டு வீரர்களை இலங்கை இராணுவம் வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது. ஆயுதப் படைகளின் விளையாட்டுத்துறையை உச்சத்தில் எடுத்துச் செல்வதற்கு இந்த தட கள வீரர்களுக்கு அனுசரணை வழங்குவதையிட்டு HUTCH பெருமை கொள்கின்றது. இலங்கையில் தலைசிறந்த விளையாட்;டு திறமைசாலிகளை வெளிக்கொணர்ந்து, விருத்தி செய்யும் எமது தனித்துவமான அணுகுமுறையை நாம் முன்னெடுத்து வருவதுடன், இவர்களின் சாதனைகள் மூலமாக எமது நாடும் நன்மை பெற முடியும்,” என்று குறிப்பிட்டார்.

HUTCH 2018 ஆம் ஆண்டில் 4Gசேவையை வழங்கவுள்ளது

Hutch வர்த்தகநாமத்தின் கீழ் முன்னிலை வகித்து வருகின்ற ஒரு மொபைல் புரோட்பான்ட் தொழிற்பாட்டாளரான Hutchison Telecommunications Lanka (Pvt) Ltd, இலங்கையில் நாடளாவியரீதியில் 4G வலையமைப்பை செயல்படுத்துவதற்கு இலங்கை தொலைதொடர்பாடல்கள் ஒழுக்காற்று ஆணைக்குழு மற்றும் முதலீட்டு ஊக்குவிப்புச் சபை ஆகியவற்றிடமிருந்து தேவையான அனைத்து அனுமதி அங்கீகாரங்களையும் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.

நாட்டில் 3G தொழிற்பாட்டின் வெற்றியைத் தொடர்ந்து இந்த புதிய, பாரிய முதலீட்டு ஆதரவை வழங்குவதற்கு Hutch இன் தாய்நிறுவனமான ஹொங்கொங் நாட்டிலுள்ள CKH Holdings Ltd தீர்மானித்துள்ளது.

2018 ஆம் ஆண்டின் பின் அரையாண்டு காலப்பகுதியில் இது ஆரம்பிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், நாட்டில் 4G சேவைகளை வழங்கும் 3 ஆவது தொழிற்பாட்டாளராக Hutch மாறவுள்ளது.

இதை நடைமுறைப்படுத்த அணுசரனை வழங்கியமைக்காக இலங்கை தொலைதொடர்பாடல்கள் ஒழுக்காற்று ஆணைக்குழு மற்றும் முதலீட்டு ஊக்குவிப்புச் சபை ஆகிய இரு நிறுவனங்களும் வழங்கியுள்ள ஆதரவு மற்றும் வழிகாட்டலை Hutch போற்றுகின்றது. டிஜிட்டல் இலங்கையைத் தோற்றுவிக்கும் அரசாங்கத்தின் இலக்கிற்கு இந்த முதலீடு துணை போவதாக அமைந்துள்ளது.

4G சேவைகளை செயல்படுத்துவதால் மிகவும் கட்டுபடியாகும் விலைகளில் மிகச் சிறந்த மொபைல் புரோட்பான்ட் சேவை அனுபவத்தை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்கான பணிகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு இது Hutch நிறுவனத்திற்கு இடமளிக்கும்.

Hutchison Telecommunications Lanka (Private) Limited “Hutch” என்ற வர்த்தக நாமத்தின் கீழ் தொழிற்பட்டு, இலங்கையில் மொபைல் தொலைதொடர்பாடல் சேவைகளை வழங்குவதில் முன்னணி வகிக்கும் நிறுவனமாகத் திகழ்ந்து வருகின்றது. அதன் சேவைகள் நாடளாவியரீதியில் அனைத்து மாவட்டங்களுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ளதுடன், கட்டுபடியாகும் விலைகளில் அதிநவீன மொபைல் புரோட்பான்ட் தீர்வுகளை வழங்கி வருகின்றது. ஹொங்கொங் நாட்டைத் தளமாகக் கொண்ட Global Fortune 500 conglomerate நிறுவனங்களுள் ஒன்றான CK Hutchison Holdings Limited (CKH) இன் தொலைதொடர்பாடல்கள் பிரிவான Hutchison Asia Telecom இன் ஒரு உறுப்பு நிறுவனமே Hutchison Telecommunications Lanka (Private) Limited ஆகும்.

சிறந்த பெறுபேறுகளை வெளிப்படுத்திய அணிக்கு ‘Hutch Champion’s Challenge’ நிகழ்வில் Hutch இன் வெகுமதிகள்

பதிவிறக்கம் செய்க

Hutch நிறுவனம் தனது விற்பனை அணியைச்சார்ந்தவர்கள் மத்தியில் மிகச் சிறந்த பெறுபேறுகளை வெளிப்படுத்தியவர்களுக்கு இனங்காணல் அங்கீகாரமளித்து அவர்களைப் பாராட்டும் முகமாக 2017 மார்ச் 20 அன்று ஸ்டைன் ஸ்டூடியோவில் ‘Hutch Champion’s Challenge 2016’ நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.

நாடெங்கிலுமிருந்து 500 இற்கும் மேற்பட்ட HUTCH ஊழியர்கள் மற்றும் வியாபாரப் பங்காளர்கள் பெரும் எண்ணிக்கையில் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Hutchison Asia Telecommunications Ltd நிறுவனத்தின் செயற்திட்டங்களுக்கான பணிப்பாளரான ஆன் சென் Hutchison Asia Telecommunications Ltd நிறுவனத்தின் பிராந்திய நிதிக் கட்டுப்பாட்டு அதிகாரியான அனிட்டா வொங் மற்றும் Hutch Sri Lanka நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான திருக்குமார் நடராசா, முகாமைத்துவ அதிகாரிகள் மற்றும் ஊழியர்களும் நிகழ்வில் கலந்து சிறப்பித்துள்ளனர்.

தமது பணியில் அதிசிறந்த பெறுபேறுகளை வெளிக்காண்பித்துள்ள விற்பனை அணியைச் சார்ந்த பணியாளர்களுக்கு உரிய இனங்காணல் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதுடன் விசேட விருதுகள் பிரிவுகளின் கீழ் அவை உள்ளடக்கப்பட்டு, அவர்களை மேலும் உற்சாகப்படுத்தும் ஒரு முயற்சியாகவும் இது அமைந்துள்ளது.

இந்நிகழ்வில் Hutch நிறுவனத்தின் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் புதிய முன்னெடுப்புக்கள் தொடர்பில் தொடர்பாடல் விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளதுடன் சந்தையில் தற்போது காணப்படும் வாய்ப்புக்கள் மற்றும் சவால்கள் தொடர்பில் பணியாளர்களின் கருத்துக்களை செவிமடுத்து அவர்களுடன் இடைத்தொடர்புபடவும் இது வாய்ப்பளித்துள்ளது.

சிம் அட்டையை வீட்டிற்கே நேரடியாக விநியோகிக்கும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ள HUTCH

இணையத்தில் பதிவை மேற்கொண்டு வாடிக்கையாளர்கள் இலவச HUTCH சிம் அட்டையைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இலங்கையில் அதிவிரைவாக வளர்ச்சி கண்டுவருகின்ற மொபைல் புரோட்பான்ட் தொலைதொடர்பாடல்கள் சேவை வழங்குனரான HUTCH, மற்றுமொரு சேவையை முதன்முதலாக அறிமுகப்படுத்தியுள்ளதுடன் அதன் மூலமாக தற்போதைய மற்றும் எதிர்கால வாடிக்கையாளர்களுக்கு சௌகரியத்தை வழங்கும் இத்தகைய ஒரு சேவையை முதன்முதலாக வழங்க முன்வந்துள்ளது.

HUTCH அறிமுகப்படுத்தியுள்ள ‘இணையத்தின் மூலமான சிம் அட்டை விண்ணப்பம் மற்றும் விநியோக’ சேவையின் கீழ் வாடிக்கையாளர்கள் தமது HUTCH சிம் அட்டைகளை பெற்றுக்கொள்வதற்கு இணையத்தின் மூலமான மிக இலகுவான பதிவு நடைமுறையின் கீழ் விண்ணப்பித்து அவற்றை எவ்வித கட்டணங்களுமின்றி தமது வீடுகளுக்கே நேரடியாக தருவித்துக்கொள்ள முடியும்.

தற்போதைய காலகட்டத்தில் நுகர்வோரின் வேலைப்பளுவைக் கருத்தில் கொண்டும் அவர்கள் தமது அன்றாடத் தேவைகள் பலவற்றை தமது ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிகணினிகளை (லப்டொப்) மூலமாக இணையத்தினூடாக நிறைவேற்றிக்கொள்வது அதிகரித்துள்ளமையாலும் புதிய சிம் அட்டையொன்றை பெற்றுக்கொள்வதற்கு சிம் அட்டை விற்பனை மையம் ஒன்றுக்கு தாங்களே நேரடியாக செல்ல வேண்டிய தேவையை விடுத்து, இணைய வசதியை உபயோகித்து, மிகவும் சௌகரியமான வழியில், வாடிக்கையாளர்கள் தமக்குத் தேவையான சிம் அட்டைகளைப் பெற்றுக்கொள்ளும் இவ்வசதியை HUTCH நடைமுறைப்படுத்தியுள்ளது.

இதன் அறிமுக சலுகையாக, ஏராளமான விசேட வெகுமதித் திட்டங்களை HUTCH சிம் அட்டைகள் மூலமாகப் பெற்றுக்கொள்ள முடியும். விநியோகம் இடம்பெறும் சமயத்தில் HUTCH சிம் அட்டை உடனடியாகவே தொழிற்படுத்தப்படுவதால் வாடிக்கையாளர்கள் அதனைப் பெற்றுக்கொண்ட உடனேயே பயன்படுத்த முடியும்.

தற்போது அறிமுகத் திட்டமாக HUTCH சிம் அட்டை விநியோக சேவையானது, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி மற்றும் குருணாகல் ஆகிய பிரதேசங்களில் வழங்கப்படுவதுடன் வாடிக்கையாளர்களின் அதிகரிப்பு மற்றும் தேவைகளின் அடிப்படையில் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் இதனை விரைவில் விஸ்தரிப்பதற்கான ஏற்பாடுகளை HUTCH பரிசீலனை செய்யவுள்ளது.

அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இணையத்தினூடான சிம் அட்டை விநியோக சேவை தொடர்பில் HUTCH ஸ்ரீலங்கா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான திருக்குமார் நடராசா கருத்து வெளியிடுகையில்,

“எமது வாடிக்கையாளர்களுக்கு, சௌகரியமான, அதேசமயம் நியாயமான கட்டணங்களுடன் பொருத்தமான மொபைல் தீர்வுகளை வழங்கும் முயற்சிகளில் HUTCH தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது.

மக்கள் மத்தியில் டிஜிட்டல் பயன்பாட்டுடனான வாழ்க்கைமுறை அதிகரித்துச் செல்லும் நிலையில், அவர்களின் சிரமங்களை இயன்றளவு போக்கி, அவர்கள் தமக்குத் தேவையான HUTCH சிம் அட்டையொன்றை பெற்றுக்கொள்ளும் வகையில் சௌகரியமான நடைமுறையொன்றை அறிமுகப்படுத்தவேண்டிய தேவை உள்ளமையை HUTCH தெளிவாக விளங்கிக்கொண்டது. இந்த தனித்துவமான சேவையை, எவ்விதமான விளம்பரங்களுமின்றி, மிகவும் எளிமையான முறையில் அறிமுகப்படுத்தியிருந்தாலும் புதிய வாடிக்கையாளர்கள் உடனடியாகவே இச்சேவையின் மீது ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளமை எமக்கு மிகுந்த ஊக்கமளிக்கின்றது.

எதிர்காலத்தில் வாடிக்கையாளர்கள் தமது HUTCH சிம் அட்டையைக் கொள்வனவு செய்வதற்கு, அவர்களின் விருப்பத்திற்குரிய ஒரு தெரிவாக சௌகரியமான இச்சேவை மாறவேண்டும் என எதிர்பார்க்கின்றோம்” என்று குறிப்பிட்டார்.

Hutch Champion’s Challenge நிகழ்வில் உச்ச விற்பனைப் பெறுபேறுகளை வெளிப்படுத்தியவர்கள் கௌரவிக்கப்பட்டுள்ளனர்

பதிவிறக்கம் செய்க

இலங்கையில் மிகவும் விரைவாக வளர்ச்சி கண்டு வருகின்ற 3G வலையமைப்பான Hutch, அண்மையில் இடம்பெற்ற Hutch Champion’s Challenge 2015/16 விருது வழங்கும் நிகழ்வில் நிறுவனத்தின் அதியுச்ச விற்பனைப் பெறுபேறுகளை வெளிப்படுத்தியவர்களுக்கு இனங்காணல் அங்கீகாரம் அளித்து கௌரவித்துள்ளது.

2015 ஆம் ஆண்டில் அதியுச்ச பெறுபேறுகளை வெளிப்படுத்தியவர்கள் இந்த விமரிசையான நிகழ்வில் பாராட்டப்பட்டதுடன், Hutchison Asia Telecom நிறுவனத்தின் செயற்திட்ட பணிப்பாளரான ஆன் சென், Hutch நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான திருக்குமார் நடராசா மற்றும் Hutch Sri Lanka நிறுவனத்தின் முகாமைத்துவ அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்துள்ளனர். நாடெங்கிலுமுள்ள 500 வரையான Hutch விற்பனை ஊழியர்கள் மற்றும் விநியோக பணியாளர்களைக் கொண்ட பாரிய எண்ணிக்கையானோர் இந்நிகழ்வில் சமூகமளித்திருந்தனர். திரு. நடராசா அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில் ´குறிப்பாக 3G தரவு அடங்கலாக நிறுவனத்தின் விற்பனைப் பெறுபேறுகள் அண்மைக்காலத்தில் விரைவாக அதிகரித்துள்ளதுடன், இத்துறையில் தொழில்ரீதியான நேர்த்தி மற்றும் சிறப்பான சேவை ஆகியவற்றை வெளிப்படுத்திய வலிமையான விற்பனை அணியே இதனை முன்னெடுக்க வழிகோலியுள்ளது´.

இலங்கையில் மொபைல் தொலைதொடர்பாடல் சேவைகளை வழங்குவதில் முன்னிலையில் திகழும் ஒரு நிறுவனமான Hutchison Telecommunications Lanka (Private) Limited, “Hutch” வர்த்தகநாமத்தின் கீழ் தொழிற்பட்டுவருகின்றது. நாடளாவியரீதியில் அனைத்து மாவட்டங்களிலும் தனது சேவைகளை வழங்கிவருகின்ற இந்நிறுவனம் நியாயமான கட்டணங்களில் 3G மொபைல் புரோட்பான்ட் சேவைகளை வழங்கிவருகின்றது. Hutchison Telecommunications Lanka (Private) Limited நிறுவனம் Global Fortune 500 நிறுவனங்கள் பட்டியலிலுள்ள Hutchison Whampoa Limited (“HWL”) குழுமத்தின் ஒரு அங்கமாகும். HWL குழுமத்தின் தொலைதொடர்பாடல் சேவைப் பிரிவு நவீன 3G தொழிற்பாடுகளில் ஒரு முன்னோடியாக உள்ளதுடன், ஐக்கிய இராச்சியம், இத்தாலி, அயர்லாந்து, டென்மார்க்,அவுஸ்திரியா மற்றும் சுவீடன் உட்பட ஐரோப்பாவிலும், அவுஸ்திரேலியாவிலும், ஹொங்கொங், மக்காவு, வியட்னாம், இந்தோனேசியா மற்றும் இலங்கை உட்பட ஆசியாவிலும் தனது தொழிற்பாடுகளைக் கொண்டுள்ளதுடன்,அனேகமான நாடுகளில் ´3´ என்ற வர்த்தகநாமத்தின் கீழ் இயங்கிவருகின்றது.

Hutch Champions Challenge

இன் 365 மூலம் புகையிரத டிக்கட்

பதிவிறக்கம் செய்க

இலங்கையில் அதிவிரைவாக வளர்ச்சிகண்டு வருகின்ற 3G வலையமைப்புக்களில் ஒன்றான Hutch, பெறுமதிமிக்க தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கிவரும் பெறுமதிசேர் சேவைகளில் மற்றுமொரு அம்சமாக Hutch கையடக்கத்தொலைபேசியூடாக நேரடியாக புகையிரத டிக்கட்டுக்களைக் கொள்வனவு செய்வதற்கு இடமளிக்கும் வகையில் மொபிடெல் மற்றும் இலங்கை புகையிரத திணைக்களம் ஆகியவற்றுடன் பங்குடமையை ஏற்படுத்தியுள்ளது.

தினசரி புகையிரதம் மூலமாக பயணிக்கும் 300,000 பிரயாணிகளுக்கு இச்சேவை ஒரு மகத்தான வரப்பிரசாதமாக அமைந்துள்ளதுடன், அவர்கள் தமது டிக்கட்டுக்களை கொள்வனவு செய்வதற்கு நீண்ட வரிசைகளில் கால்கடுக்க காத்திருக்க வேண்டிய அசௌகரியத்தை அகற்றி, தமது கையடக்கத்தொலைபேசியூடாக புகையிரத டிக்கட் முற்பதிவை மேற்கொள்ளும் வாய்ப்பை அவர்களுக்கு அளித்துள்ளது. வாடிக்கையாளர்கள் தமது Hutch கையடக்கத்தொலைபேசியில் 365 இனை டயல் செய்து வாரத்தின் ஏழு நாட்களும், 24 மணி நேரமும் கிடைக்கப்பெறும் முற்பதிவு முகவரின் சேவையின் உதவியுடன் தமது முற்பதிவுகளை மேற்கொள்ள முடியும்.
டிக்கட்டுக்கான பணம் முறையான உறுதிப்படுத்தல்களின் பின்னர் கையடக்கத்தொலைபேசி நிலுவையிலிருந்து நேரடியாக கழிக்கப்படுவதுடன், SMS உறுதிப்படுத்தல் உடனடியாகவே வாடிக்கையாளருக்கு அனுப்பி வைக்கப்படும்.
முற்பதிவின் உறுதிப்படுத்தல் விபரங்களை புகையிரத நிலையத்திலுள்ள விசேட கருமபீடத்தில் சமர்ப்பித்து தமது டிக்கட்டுக்களை பெற்றுக்கொள்ள முடியும்.
கண்டி-கொழும்பு இன்டர்சிட்டி, வவுனியா இன்டர்சிட்டி, வவுனியா இரவு தபால், யாழ்தேவி, பதுளை இரவு தபால், உடரட்ட மெனிக்கே, பொடி மெனிக்கே மற்றும் ராஜதானி எக்ஸ்பிரஸ் அடங்கலாக முக்கிய புகையிரத மார்க்கங்களுக்கான விசேட புகையிரத ஆசன முற்பதிவு சேவை இதன் மூலமாகக் கிடைக்கப்பெறுகின்றது.
Hutch நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான திருக்குமார் நடராசா கருத்துத் தெரிவிக்கையில் “Hutch வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பெறுமதியான மற்றும் சௌகரியமான இந்த புகையிரத டிக்கட் பதிவு சேவையை வழங்குவதற்காக மொபிடெல் மற்றும் இலங்கை புகையிரத திணைக்களம் ஆகியவற்றுடன் Hutch இணைந்துள்ளமையையிட்டு நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளேன்.
கையடக்கத்தொலைபேசி வாடிக்கையாளர்களுக்கு சாத்தியமான வழிகளில் இத்தகைய பயன்பாட்டு சேவைகளை வழங்குவதை விஸ்தரிப்பதற்கு, மொபிடெல் போன்ற தொழிற்துறை முன்னணி நிறுவனங்களுடன் Hutch நெருக்கமாக இணைந்து செயற்பட்டு வருகின்றமைக்கு மற்றுமொரு உதாரணமாக இது அமைந்துள்ளது” என்று குறிப்பிட்டார்.
மொபிடெல் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பிரிவிற்கான சிரேஷ்ட பொது முகாமையாளரான நளின் பெரேரா கருத்துத் தெரிவிக்கையில் “மொபிடெலின் mTicketing தளமேடையின் மூலமாக தொழிற்துறையில் உறுதியான பிணைப்புக்களை கட்டியெழுப்பி, சம்பந்தப்பட்ட ஏனைய அனைத்துத் தரப்பினருடனும் சிறந்த வியாபார உறவுமுறைகளை வளர்ப்பதற்கு எமக்கு இடமளிக்கும் வகையில் வாய்ப்பளிக்கும் புதிய பங்குடமையொன்றில் கால்பதித்துள்ளமையையிட்டு மொபிடெல் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளது.
புகையிரத டிக்கட் முற்பதிவு சேவை ஒரு முக்கியமான முன்னெடுப்பாக அமைந்துள்ளதுடன், mTicketing இனால் வழங்கப்படும் சேவைகளை தற்போது Hutch வாடிக்கையாளர்களும் பெற்று அனுபவிக்க முடியும்” என்று குறிப்பிட்டார்.
பெறுமதிமிக்க தனது வாடிக்கையாளர்களின் உண்மையான தேவைகளை எப்போதும் இனங்கண்டு அவற்றிற்கு தீர்வளித்து வந்துள்ள Hutch, கையடக்கத்தொலைபேசி மூலமான வங்கிச்சேவை, காப்புறுதி மற்றும் e-channeling போன்று ஏற்கனவே Hutch வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் ஏனைய சேவைகளுடன் தற்போது இந்த சேவையும் பெறுமதிமிக்க ஒரு கூடுதல் சேர்க்கையாக அமைந்துள்ளது.

 

எந்த வலையமைப்பிற்கும் ‘ஒரே கட்டணம்’

பதிவிறக்கம் செய்க

Hutch நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி, புதிய சம கட்டண தீர்மானத்திற்காக தொலைதொடர்பாடல்கள் ஒழுக்காற்று ஆணைக்குழுவிற்குப் பாராட்டு

உங்களுடைய வலையமைப்பிற்கு வெளியில் உள்ள இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்த அதிக கட்டணத்தை இனிமேலும் செலுத்த வேண்டியதில்லை

நாட்டின் தொலைதொடர்பாடல் ஒழுக்காற்று அதிகார சபையான தொலைதொடர்பாடல்கள் ஒழுக்காற்று ஆணைக்குழு, 2016 பெப்ரவரி 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் புதிய சம கட்டண வீதத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

வலையமைப்பிற்கு உள்ளே மற்றும் வலையமைப்பிற்கு வெளியே என முன்பு இருந்த இரட்டை கட்டண வீத முறைமையின் கீழ் வாடிக்கையாளர்கள் தமது வலையமைப்பிற்கு வெளியிலுள்ள இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்துவதற்கு வலையமைப்பின் உள்ளே அழைப்பிற்காக செலுத்தும் கட்டணத்தை விடவும் இரு மடங்கு கட்டணத்தை செலுத்த வேண்டியிருந்தது.

வேறு ஒரு வலையமைப்பின் கீழ் இணைப்பைக் கொண்டிருந்த தமது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு அழைப்பினை ஏற்படுத்துவதற்கு அதிகமான கட்டணத்தை செலுத்த வேண்டியிருந்தமையால், இந்த இரட்டை கட்டண முறைமை கைத்தொலைபேசி வாடிக்கையாளர்கள் மத்தியில் ஏராளமான குழப்பங்களையும், சிரமங்களையும் ஏற்படுத்தியிருந்தது.

வாடிக்கையாளர்கள் தற்போது எந்த வலையமைப்பின் கீழ், எந்தவொரு இலக்கத்திற்கும் அழைப்பினை மேற்கொள்ளும் போதும் ஒரே கட்டண வீதமே அறவிடப்படுகின்றது என்பதை அறிந்து நிம்மதியடைய முடியும். மேலும் தமது வலையமைப்பிற்கு வெளியிலுள்ள இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்துவதற்கு அதிக கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்ற கவலையை விடுத்து, வாடிக்கையாளர்கள் தற்போது தாங்கள் விரும்புகின்ற எந்தவொரு கைத்தொலைபேசி சேவை வழங்கல் வலையமைப்பையும் தெரிவுசெய்து கொள்ள முடியும்.

இந்த கட்டண முறைமை தற்போது உள்ள இணைப்புக்களுக்கு சுயமாகவே கிடைக்கப்பெறாவிடினும், தற்போதைய வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பும் பட்சத்தில் புதிய சம கட்டண வீத முறைமைக்கு தங்களது தற்போதைய இணைப்புக்களை மாற்றிக்கொள்ள முடியும். தற்போதைய வாடிக்கையாளர் தளத்தை புதிய சம கட்டண வீதத்திற்கு மாற்றியமைப்பதற்குத் தேவையான ஏற்பாட்டு வசதிகளை தொலைதொடர்பாடல்கள் ஒழுக்காற்று ஆணைக் குழு தற்போது ஆராய்ந்து வருவதுடன், இது தொடர்பில் வெகு விரைவில் உரிய தீர்மானத்தையும் அறிவிக்கவுள்ளது.

மிகச்சிறந்த பெறுமதி கொண்ட சேவை மற்றும் வெளிப்படையான தொழிற்பாடு ஆகியவற்றை வழங்குவதில் எப்போதும் முன்னிலை வகித்துவந்துள்ள Hutch, இந்த பயனை தனது வாடிக்கையாளர்களுக்கு உடனடியாகவே அமுல்படுத்தியுள்ளது. Hutch மேலும் ஒரு படி மேலே சென்று, ´செக்கன்´ அடிப்படையிலான கட்டண வீதத்தை அறவிடுவதுடன், இதன் மூலமாக வாடிக்கையாளர்கள் தாங்கள் அழைப்பை மேற்கொண்ட உண்மையான நேரத்திற்குரிய கட்டணத்தை மட்டும் செலுத்தி, அழைப்பிற்கான உச்ச பயனை அனுபவிப்பதற்கும் இடமளிக்கின்றது. வாடிக்கையாளர்கள் எந்தவொரு வலையமைப்பிற்கும் அழைப்பினை மேற்கொள்ளும் போதும் செக்கன் ஒன்றுக்கு ரூபா 0.03 என்ற அடிப்படையில் மட்டுமே அழைப்புக்களுக்கான கட்டணம் அறவிடப்படும்.

மேற்கொள்ளப்படுகின்ற அழைப்புக்களில் 65% இற்கும் அதிகமானவை ஒரு நிமிடத்திற்கு உட்பட்ட அழைப்புக்களாக உள்ளமையால், அழைப்புக்களுக்கான சம கட்டண வீத முறைமையின் இணைந்த அனுகூலத்துடன் Hutch நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்ச சேமிப்பை வழங்குவதற்கு இடமளிக்கும்.

தொலைதொடர்பாடல்கள் ஒழுக்காற்று ஆணைக்குழுவால் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த புதிய தீர்மானம் தொடர்பில் தனது கருத்தைத் தெரிவித்த Hutchison Telecommunications Sri Lanka நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான திருக்குமார் நடராசா அவர்கள் ´வாடிக்கையாளர்கள் தங்களுக்கு மிகச் சிறந்த உற்பத்திகள் மற்றும் சேவையை வழங்குகின்ற சேவை வழங்குனரை தாம் விரும்பியவாறு சுதந்திரமாகச் தெரிவுசெய்வதற்கு வாய்ப்புக் கிட்டியுள்ளமையால் உள்நாட்டு அழைப்புக் கட்டண முறைமையை எளிமைப்படுத்தும் தொலைதொடர்பாடல்கள் ஒழுக்காற்று ஆணைக்குழுவின் முயற்சிகளுக்கு Hutch நிறுவனம் தனது பூரண ஆதரவை வழங்கும்´ என்று குறிப்பிட்டார்.

´மிகச் சிறந்த தரத்தில் தேசிய 3G சேவைகளை வழங்குவதில் நன்மதிப்பைச் சம்பாதித்துள்ள Hutch, தற்போது முழுமையான மற்றும் நியாயமான கட்டணத்தில் கைத்தொலைபேசி சேவை அனுபவத்தை வழங்குகின்ற குரல் சேவையை போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில் சம கட்டணத்தில் வழங்குவதற்கு முடிந்துள்ளது´ என்று நடராசா அவர்கள் மேலும் குறிப்பிட்டார்.

Flat Rate