கட்டண முகாமைத்துவம்

உடனடி கடன்

பண மிகுதி முடிந்துவிட்டதா? உங்கள் அழைப்புகள், sms கள் மற்றும் இணையதிட்கான ரூ.80 மதிப்புள்ள உடனடி கடன் தொகையை பெற்றிடுங்கள். *232# இனை டயல் செய்யுங்கள். கடன் பெறுவதற்கான நிபந்தனைகளுக்கு நீங்கள் உட்பட்டவராயின் உங்கள் கணக்கு மிகுதி குறைவடையும் நேரத்தில் உங்களுக்கு ஒரு sms மூலம் நீங்கள் பெற்ற கடன்தொகை அனுப்பிவைக்கப்படும்.

உடனடி கடன்தொகை மூலம் எவ்வளவு மதிப்புள்ள கடன்தொகையை என்னால் பெற்றுக்கொள்ளமுடியும்?

நீங்கள் அதிகபட்சம் ரூ.80 மதிப்புள்ள கடன்தொகையை பெற முடியும். உங்கள் recharge செய்யும் அளவுகள் மற்றும் Hutch உடன் நீங்கள் பயணம் செய்த வருடங்களையும் ஆராய்ந்து உங்களுக்கான கடன்தொகை வழங்கப்படும்.

நான் எப்படி கடனுக்கு கோரிக்கை விடுப்பது?

முறை 1

*232# இனை டயல் செய்து கணக்கு மிகுதியை பார்த்த பின்பு அதனை தொடர்ந்து வரும் வழிமுறைகள் மூலம் உங்களால் கடனை பெற்றுக்கொள்ளமுடியும்.

முறை 2

உங்கள் பிரதான கணக்கின் மிகுதி ரூ.5 ஐ விட குறையும்போது உங்களுக்கு ஒரு sms மூலம் உங்களுக்கான கடன் வசதிகளுக்கான வழிமுறைகள் அனுப்பிவைக்கப்படும்.

நான் இந்த சேவைக்கு தகுதியானவரா?

கடந்த 2 மாதங்களுக்குள் நீங்கள் குறைந்தபட்சம் ரூ.300 இற்கு recharge செய்வதன் மூலம் இந்த சேவைக்கான தகுதியினை நீங்கள் பெறலாம்.

நான் கடன்பெற்ற தொகையை எப்படி நான் மீள்செலுத்துவது?

உங்கள் கடன்தொகை நீங்கள் அடுத்த தடவை recharge செய்யும் பொழுது உங்கள் கணக்கிலிருந்து கழிக்கப்படும்.

முறை 1

நீங்கள் போதுமான அளவு recharge செய்வீர்களாயின் உங்கள் கடன்தொகை மற்றும் சேவைக்கான கட்டணம் அதிலிருந்து கழிக்கப்படும் .

முறை 2

நீங்கள் போதுமான அளவு recharge செய்யாவிட்டால் உங்கள் கடன்தொகை மற்றும் சேவைக்கான கட்டணத்தின் ஒரு பகுதி அதிலிருந்து கழிக்கப்படும்.

அதாவது உங்கள் கடன் மிகுதி ரூ.60 ஆகா இருக்கும்பொழுது நீங்கள் ரூ.30 இற்கு recharge செய்தால் உங்கள் கணக்கிலிருந்து ரூ.25 அறவிடப்பட்டு ரூ.5 மிகுதியாக வைக்கப்படும். (உங்களது கடன் மிகுதி ரூ.35 ஆகா காணப்படும், இது உங்களின் தொலைபேசிக்கு sms மூலம் அனுப்பிவைக்கப்படும் ).

நான் இக்கடன் தொகையை செலுத்தும் முன்பு இன்னொரு கடன் தொகையை பெறமுடியுமா?

நீங்கள் ஒரு கடனை பெறுவதற்கு முன்பு நீங்கள் முன்பு பெற்ற கடன்தொகைகளை செலத்தியிருக்கவேண்டும்.

இந்த சேவையை நான் வாழ்நாள் முழுவதும் பெறமுடியுமா?

இச்சேவையை நீங்கள் பெறுவதற்கு மேற்கூறிய நிபந்தனைகளை பூர்த்திசெய்திருத்தல் அவசியமானது.

இந்த கடன் வசதி மூலம் நான் எந்த சேவைகளை பாவனை செய்யமுடியும்?

இக்கடன் மூலம் நீங்கள் hutch இந்த அனைத்து சேவைகளைக்கும் பாவிக்க மற்றும் கொள்முதல் செய்யமுடியும். இதில் voice calls, Data packs, மற்றும் ஏனைய மதிப்புமிக்க சேவைகளும் அடங்கும்.