Hutch அறிமுகப்படுத்தியுள்ள சம்பத் வங்கி மூலமான றீலோட் தீர்வு

இலங்கையில் அதிவேகமாக வளர்ச்சி கண்டு வருகின்ற மொபைல் தொலைதொடர்பாடல்கள் நிறுவனமான Hutch, சம்பத் வங்கியுடன் இணைந்து, மிகவும் இலகுவான வழியில் தவறவிடப்பட்ட அழைப்பு (missed call) ஊடாக வாடிக்கையாளர்கள் உடனடி றீலோட்களைப் பெற்றுக்கொள்வதற்கு அவர்களுக்கு இடமளிக்கின்ற மீள்நிரப்பு சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

“Missed Call Reload” வசதியானது சம்பத் வங்கியால் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், வாடிக்கையாளர்கள் 458 என்ற இலக்கத்தை அழைத்து, துண்டிப்பதன் மூலமாக மிக இலகுவாக, எந்நேரமும் தமது சம்பத் வங்கிக் கணக்கிலிருந்து தங்களுடைய Hutch இணைப்பிற்கு உடனடியாக மீள்நிரப்பல் செய்யும் வகையில் பாவனையாளர் சிநேகபூர்வமான வசதியாக இது காணப்படுகின்றது.

தவற விடப்பட்ட அழைப்பு அறிவிப்பு கிடைக்கப்பெறும் சமயத்தில் முற்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட ரூபா 100 என்ற மீள்நிரப்பு தொகை உடனடியாகவே வாடிக்கையாளரது மொபைல் கணக்கிற்கு வரவு வைக்கப்படுவதுடன், சம்பத் வங்கிக் கணக்கிலிருந்து தானாகவே கழிக்கப்படும். இந்த வழிமுறை மூலமாக ஒன்றுக்கு மேற்பட்ட மீள்நிரப்பல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

இந்த வசதியை அறிமுகப்படுத்துவது தொடர்பில் Hutch நிறுவனத்தின் கையகப்படுத்தல் மற்றும் விநியோகத் துறை உதவிப் பொது முகாமையாளரான மெல்றோய் தோமஸ் அவர்கள் கருத்து வெளியிடுகையில், ´தவறவிடப்பட்ட அழைப்பு முறை மூலமாக எமது வாடிக்கையாளர்களுக்கு இப்புதிய மீள்நிரப்பல் வசதியை அறிமுகப்படுத்துவதற்காக சம்பத் வங்கியுடன் இணைவதையிட்டு Hutch மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளதுடன், அவர்கள் தங்களுடைய மொபைல் கணக்கில் சௌகரியமான மற்றும் திறன் மிக்க வழியில் மீள்நிரப்பலை மேற்கொள்ளும் வசதியாக இது அமையும் என நம்புகின்றோம்,´ என்று குறிப்பிட்டார்.

´எமது வாடிக்கையாளர்களின் வாழ்வில் சௌகரியத்தையும், திறனையும் வழங்கும் வகையில் புத்தாக்கமான சிந்தனைகள் மற்றும் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் வழிமுறைகளை சம்பத் வங்கி எப்போதும் முன்னெடுத்து வருகின்றது. மொபைல் தொலைபேசி என்பது இன்றைய காலகட்டத்தில் ஒரு அத்தியாவசியமான பொருளாக மாறியுள்ளதுடன், எப்போதும், எங்கும் மீள்நிரப்பலை மேற்கொள்ளக்கூடிய வசதியை கொண்டுள்ளமை மிகப் பெரிய சௌகரியமான செயற்பாடாகும். ஆகவே Hutch போன்ற மொபைல் சேவை வழங்குனர்களுடன் கைகோர்ப்பதற்கு நாம் தீர்மானித்ததுடன், இந்த சௌகரியமான மற்றும் திறன்மிக்க மீளிநிரப்பல் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளோம்,´ என்று சம்பத் வங்கியின் இலத்திரனியல் வங்கிச்சேவைப் பிரிவின் தலைமை முகாமையாளரான துஷ்யந்த தசநாயக்க அவர்கள் குறிப்பிட்டார்.