Hutch அறிமுகப்படுத்தும் ‘Common Card’

இலங்கையில் அதிவேகமாக வளர்ச்சி கண்டு வருகின்ற மொபைல் சேவை வழங்கல் நிறுவனமான Hutchison Telecommunications Lanka, எடிசலாட் நிறுவனத்தின் உள்நாட்டுத் தொழிற்பாடுகளை கையகப்படுத்தும் தனது நடவடிக்கைகளை அண்மையில் பூர்த்தி செய்துள்ளது. இந்த கூட்டிணைப்பு நடவடிக்கை பூர்த்தி செய்யப்பட்டுள்ளமையால் 078 மற்றும் 072 ஆகிய இலக்கங்களில் ஆரம்பிக்கும் இரு வகையான இணைப்புக்களும் தற்போது Hutch வர்த்தகநாமத்தின் கீழ் தொடர்ந்தும் இயங்கவுள்ளன.

078/072 வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் முழுமையான சேவைகளை வழங்குவதை Hutch உறுதி செய்வதுடன், இலங்கையில் மிகவும் கட்டுபடியாகும் மொபைல் சேவைகளின் பயனை அனைத்து வாடிக்கையாளர்களும் பெற்றுக்கொள்வதை உறுதி செய்யும் வகையில், தனது உற்பத்திகள் மற்றும் சேவைகள் அனைத்தையும் ஒருங்கிணைக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.

இச்செயற்பாடுகளின் ஒரு அங்கமாக, ஒருங்கிணைந்த 078/072 மீள்நிரப்பல் அட்டைகளின் மூலமாக, அனைத்து Hutch 078 மற்றும் 072 வாடிக்கையாளர்களும் தமது மொபைல் மீதியை சௌகரியமாக மீள்நிரப்பிக் கொள்வதற்கு இடமளிக்கும் வகையில் common மீள்நிரப்பல் அட்டையொன்றை Hutch அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

வாடிக்கையாளர்கள் இந்த அட்டைகளை சௌகரியத்துடன் எங்கும் கொள்வனவு செய்வதை உறுதி செய்யும் வகையில், நாடெங்கிலும் 75,000 இற்கும் மேற்பட்ட Hutch சில்லறை வர்த்தக மையங்களில் இந்த Common Card தாராளமாகக் கிடைக்கப்பெறுகின்றது.

மேலும், Hutch தற்போது முன்னெடுத்து வருகின்ற வலையமைப்பு விஸ்தரிப்பு மற்றும் மேம்பட்ட வழங்கல் நடவடிக்கைகள் மூலமாக 078 மற்றும் 072 வாடிக்கையாளர்கள் வெகுவிரைவில் பாரிய 2G/3G வலையமைப்பு அடைவ மட்டத்தைக் கொண்டிருக்கவுள்ளதுடன், மேம்பட்ட வலையமைப்பு உள்ளடக்கம் மற்றும் சேவையை வழங்கும் வகையில் மிகவும் நவீனமான 4G வலையமைப்பையும் அடையப் பெற முடியும். 4G மொபைல் புரோட்பான்ட் தீர்வுகள் ஏற்கனவே மேல் மற்றும் கிழக்கு மாகாணங்களில் கிடைக்கப்பெறுவதுடன், வெகுவிரைவில் இலங்கை முழுவதும் விஸ்தரிக்கப்படவுள்ளன.

புதிய Common Card மீள்நிரப்பல் அட்டையின் அறிமுகம் தொடர்பில் Hutch Sri Lanka நிறுவனத்தின் கொள்முதல் மற்றும் விநியோகப் பிரிவின் உதவிப் பொது முகாமையாளரான மெல்றோய் தோமஸ் அவர்கள் கருத்து வெளியிடுகையில், ´விஸ்தரிக்கப்பட்டு வருகின்ற 2G/3G மற்றும் 4G வலையமைப்பு உள்ளடக்கம் மற்றும் விற்பனை வழங்கலுடன், நாட்டில் அதிவேகமாக வளர்ச்சி கண்டு வருகின்ற மொபைல் சேவை வழங்கல் நிறுவனம் என்ற வகையில் 078 மற்றும் 072 வாடிக்கையாளர்களுக்கு மகத்தான அளவில் சௌகரியத்தை வழங்கும் தளமேடையை தோற்றுவிக்கும் முயற்சிகளை நாம் முன்னெடுத்து வருகின்றோம். எமது புதுமையான Common Card அட்டைகள் தற்போது அனைத்து Hutch சில்லறை வர்த்தக மையங்கள் மூலமாகவும் தாராளமாகக் கிடைக்கப்பெறுவதுடன் எமது வாடிக்கையாளர்கள் அனைவரும் எங்கிருந்தும் இலகுவாக மீள்நிரப்பிக் கொள்வதை உறுதி செய்கின்றது,´ என்று குறிப்பிட்டார்.