Merger FAQ

வர்த்தக நாமம் மற்றும் நிர்வாகம்

1. Hutch எடிசலாட்டை கையகப்படுத்தியுள்ளதா?

ஆம், Hutch தற்போது எடிசலாட்டை கையக்கப்படுத்தியுள்ளது.

2. நிர்வாக கட்டுப்பாடு யார் வசம் உள்ளது?

நிறுவனத்தின் முழு கட்டுப்பாட்டையும் Hutch நிர்வாகம் தன்வசம் கொண்டுள்ளது.

3. எடிசலாட் வர்த்தக நாமத்துக்கு என்ன நடக்கும்? அது மூடப்பட்டுவிடுமா?

ESL வர்த்தக நாமம் 2019 ஜுலை 01 ஆம் திகதி முதல் முழுமையாக அகற்றப்பட்டு, வர்த்தக நாமம் சந்தையிலிருந்து முழுமையாக நீக்கப்படும்.

4. இரு நிறுவன செயற்பாடுகளும் வெவ்வேறாக நிர்வகிக்கப்படுமா அல்லது ஒன்றாக நிர்வகிக்கப்படுமா?

செயற்பாடுகள் ஒன்றாக நிர்வகிக்கப்படும். ஜுன் மாதத்தில் HTLL இனால் கட்டமைப்பு மற்றும் வலையமைப்பு ஒன்றிணைப்பு பூர்த்தி செய்யப்பட்டதும், Hutch வர்த்தக நாமம் மட்டும் நிலைத்திருக்கும்.

5. எடிசலாட் பழைய நீண்ட கால வாடிக்கையாளர்களுக்கு என்ன நடக்கும்?

சகல 072 வாடிக்கையாளர்களும் Hutch இடமிருந்து உயர் வாடிக்கையாளர் சேவை மற்றும் மேம்படுத்தப்பட்ட மொபைல் வலையமைப்பினூடாக தொடர்ச்சியான சேவைகளை as before பெறுவார்கள்.

6. எடிசலாட் ஆர்கேட்களுக்கு என்ன நடக்கும்?

எடிசலாட் ஆர்கேட்கள் அனைத்தும் Hutch வர்த்தக நாமம் பதிக்கப்பட்டு, Hutch நிர்வாகத்தின் கீழ் இயங்குகின்றன.

7. எடிசலாட் மற்றும் Hutch நிலையங்கள் ஒன்றிணைக்கப்படுமா? இரு வர்த்தக நாமங்களுக்கும் பொதுவான சேவை பகுதிகள் காணப்படுமா?

சகல எடிசலாட் மற்றும் Hutch நிலையங்களும் Hutch நிலையங்களாக மாத்திரம் இயங்கும். சகல 078 மற்றும் 072 வாடிக்கையாளர்களும் பொது Hutch சேவை நிலையங்களை நாட முடியும். இவற்றில் வாடிக்கையாளர் சேவைகளை பெற்றுக் கொடுப்பதற்காக நாடு முழுவதையும் சேர்ந்த 64 விநியோகத்தர் அலுவலகங்கள் மற்றும் 67 லங்காபெல் ஸ்ரோர்கள் போன்றன அடங்கியிருக்கும்.

வலையமைப்பு

1. டவர்களும் Hutch உடன் ஒன்றிணைக்கப்படுமா?

ஆம் இரு வலையமைப்புகளும் ஒரு பாரிய வலையமைப்பாக ஒன்றிணைக்கப்படும். ஆனாலும், முழு வலையமைப்பு ஒன்றிணைப்பு பூர்த்தியாக இந்த வருட இறுதி வரை தேவைப்படும்.

2. வலையமைப்பு விஸ்தரிக்கப்படுமா?

ஆம், இரு வலையமைப்புகளும் பிராந்திய மட்டத்தில் ஒன்றிணைக்கப்படும் போது வலையமைப்பு விஸ்தரிக்கப்படும்.

3. 072 வாடிக்கையாளர்களுக்கு எப்போது Hutch வலையமைப்பு/சிக்னலை பயன்படுத்த முடியும்?

2019 ஜுலை மாதம் முதல் பிராந்திய ரீதியாக 078 மற்றும் 072 வாடிக்கையாளர்களுக்கு புதிய 4G சேவைகள் அடங்கலாக மேம்படுத்தப்பட்ட வலையமைப்பு சேவைகளை அனுபவிக்கக்கூடியதாக இருக்கும்.

4. எடிசலாட் இணைப்புகளிலும் Hutch 4G செயற்படுமா?

ஆம், 4G வலையமைப்பு செயற்படுத்தப்பட்டு வலையமைப்புகள் ஒன்றிணைக்கப்பட்டவுடன், எடிசலாட் வாடிக்கையாளர்களுக்கும் தமது பழைய SIM அட்டைக்கு பதிலாக புதிய 4G USIM அட்டையை பெற்று 4G சேவையை அனுபவிக்கலாம்.

5. எனது தொலைபேசி திரையில் எந்த வலையமைப்பு தென்படும்?

ஜுன் மாதம் 1ஆம் திகதி முதல் உங்கள் திரையில் Hutch வலையமைப்பு தென்படும்.

பொருட்கள் மற்றும் சேவைகள்

1. எடிசலாட் வாடிக்கையாளர்கள் தமது SIM அட்டையை மாற்ற வேண்டுமா?

இல்லை, உடனடியாக தமது SIMஅட்டையை அல்லது இலக்கத்தை மாற்ற வேண்டியதில்லை. ஆனாலும், 4G சேவைகளை பெற்றுக் கொள்ள விரும்பும் வாடிக்கையாளர்கள் தமது SIM அட்டையை புதிய 4G USIMக்கு மாற்றிக் கொள்ள வேண்டும்.

2. 4G SIM அட்டைகளை எங்கு கொள்வனவு செய்யலாம்?

”SIM Replacement 072/078” எனும் அடையாளத்தைக் கொண்ட தெரிவு செய்யப்பட்ட விற்பனையாளர்களிடம் 4G SIM அட்டைகள் காணப்படுகின்றன.

    • 1. 4G SIM அட்டையை கொள்வனவு செய்ய கட்டணம் ஏதும் செலுத்த வேண்டுமா?
      இல்லை, தெரிவு செய்யப்பட்ட விற்பனையாளர்களிடமிருந்து SIM அட்டைகளை இலவசமாக கொள்வனவு செய்ய முடியும்.
    • 2. 4G SIM ஆக எவ்வாறு மாற்றிக் கொள்ளலாம்?
      விற்பனையாளரிடம் உங்கள் SIM அட்டையை மாற்றித்தருமாறு நீங்கள் கோரலாம் அல்லது SIM Pouchஇல் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை பின்பற்றி நீங்கள் அதனை மேற்கொள்ளலாம்.
    • 3. 4G SIM ஒன்றுக்கு மாற்றிக் கொள்வதற்கு எவ்வளவு காலம் எடுக்கும்?
      SIM Pouchஇல் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை பின்பற்றிய உடன் 4G SIM ஆக மாற்றிக் கொள்ளலாம் அல்லது விற்பனையாளர் 4G SIM அட்டை விவரங்களை பதிவு செய்த உடன் மாறும்.

3. எடிசலாட் இலக்கம் (072), Hutch இலக்கத்துக்கு (078) மாற்றப்படுமா?

தொலைபேசி இலக்கத்தில் மாற்றம் ஏற்படாது. டயலொக் 077 மற்றும் 076 இலக்கங்களுக்கு சேவை வழங்கப்படுவதை போன்று Hutch இனால் 078 மற்றும் 072 இலக்கங்களுக்கு சேவைகள் வழங்கப்படும்.

4. வாடிக்கையாளர் ஒருவர் எடிசலாட் மற்றும் Hutch Sim அட்டைகளை கொண்டிருந்தால் எதிர்காலத்தில் என்ன நடக்கும்?

அவரால் தொடர்ந்தும் இரு SIM அட்டைகளையும் வெவ்வேறு சாதனங்களில் அல்லது ஏதேனும் ஒன்றை பயன்படுத்த முடியும். அது வாடிக்கையாளரின் தெரிவை பொறுத்தது.

5. ரீலோட், டெப்-அப் அட்டை மற்றும் SIM கொள்வனவு ஆகியவற்றை எவ்வாறு பாதிக்கும்? இரு வாடிக்கையாளர்களாலும் இரு சேவைகளையும் பயன்படுத்த முடியுமா?

புதிய பொது SIM அட்டை மற்றும் டொப்-அப் அட்டைகள் இந்த மாதத்தில் அறிமுகம் செய்யப்படும் (மே 2019). விற்பனையாளர்கள் 078 மற்றும் 072 இலக்கங்களுக்கு ஒரு பொது அட்டையை இருப்பில் பேண வேண்டும்.

078 மற்றும் 072 வாடிக்கையாளர்கள் பொது டெப்-அப் அட்டையை பயன்படுத்தி தமது இலக்கங்களை டொப்-அப் செய்து கொள்ளலாம்.

6. இரு நிறுவனங்கள் ஒன்றிணைக்கப்பட்டு ஒரு நிறுவனமாக இயங்குவதனூடாக எனக்கு கிடைக்கும் அனுகூலங்கள் என்ன?

விரிவாக்கப்பட்ட 2G மற்றும் 3G வலையமைப்பு, சிறந்த வலையமைப்பு தரம், பாரிய புதிய 4G வலையமைப்பு, சகாயமான மற்றும் புத்தாக்கமான தயாரிப்புகள் மற்றும் சேவைகள், தயாரிப்புகள் மற்றும் சேவைகளை இலகுவாக பெற்றுக் கொள்ள முடிகின்றமை, 24×7நட்பான வாடிக்கையாளர் சேவை.

7. 078 வலையமைப்பிலும் எம்மால் CLIQ மற்றும் DIGIMORE ஐ பயன்படுத்த முடியுமா?

தற்போது இவை 072 SIM அட்டைகளில் மட்டுமே வழங்கப்படும். எதிர்காலத்தில் 078 இலக்கத்திலும் இந்த சேவைகளை பெற்றுக் கொடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதேவேளை, எமது சிக்கனமான இடைவிடாத கட்டண திட்டங்களை நீங்கள் பயன்படுத்தலாம்.

8. எடிசலாட் மற்றும் Hutch இடையிலான அழைப்புகள் எப்போதும் இலவசமாக அமைந்திருக்குமா?

ஆம், voice packகளை கொள்வனவு செய்தால் 078 மற்றும் 072 வாடிக்கையாளருக்கிடையிலான அழைப்புகள் இலவசமானவையாக அமைந்திருக்கும்.

9. நான் ஒரு எடிசலாட் வாடிக்கையாளர். Hutch இணையத்தளத்தில் எனது எடிசலாட் இலக்கத்துக்கான கொடுப்பனவை மேற்கொள்ள முடியுமா?

Hutch வாடிக்கையாளர்கள் கொடுப்பனவுகளை hutch.lk இலும், எடிசலாட் வாடிக்கையாளர்கள் கொடுப்பனவுகளை Etisalat.lk இலும் மேற்கொள்ளலாம். எதிர்காலத்தில் இந்த சேவை ஒன்றிணைக்கப்படும்.

10. எனது கட்டணப்பட்டியல் மற்றும் கட்டணப்பட்டியல் தயாரிப்பு திகதி மாற்றமடையுமா?

அது மாறாமல் அமைந்திருக்கும். எதிர்காலத்தில் மாற்றமடையக்கூடும்.

11. எனது கட்டணம்/சலுகைகள்/அனுகூலங்கள் மாற்றமடையுமா?

ஏற்கனவே காணப்படும் வாடிக்கையாளர்கள் தற்போது அமுலிலுள்ள கட்டணம்/சலுகைகள்/அனுகூலங்களை தொடர்ந்தும் அனுபவிப்பார்கள், ஆனாலும் எதிர்காலத்தில் TRC ஒழுங்குபடுத்தல்கள் மேற்கொள்ளப்படும் மாற்றங்களை பொறுத்து மாற்றமடையலாம். எவ்வாறாயினும் சகாயமான பக்கேஜ்களை பெற்றுக் கொடுப்பதற்கு Hutch எப்போதும் தன்னை அர்ப்பணித்துள்ளது.

வாடிக்கையாளர் சேவை

1. கட்டணப்பட்டியல் மாதிரி மற்றும் கட்டணப்பட்டியல் திகதி போன்றன மாற்றமடையுமா?

072/078 ஆகியவற்றுக்கு கட்டணப்பட்டியல் திகதிகள் மாறாமலிருக்கும்.

2. HUTCH இல் போன்று 072 இல் முற்கொடுப்பனவு முறையில் VIP இலக்கங்களை கொள்வனவு செய்ய முடியுமா?

ஆம், 072 வாடிக்கையாளர்களுக்கும் VIP இலக்கங்களை கொள்வனவு செய்ய வாய்ப்பளிக்கப்படும்.

3. என்னிடம் இரு இணைப்புகளும் காணப்பட்டால், ஒரு பொதுவான கட்டணப்பட்டியல் எனக்கு வழங்கப்படுமா?

இல்லை, உங்களின் இரு கணக்குகளுக்கும் இரு வெவ்வேறான கட்டணப்பட்டியல்கள் வழங்கப்படும்.

4. பிரச்சினைகள் மற்றும் முறைப்பாடுகள் தொடர்பில் யாரை தொடர்பு கொள்ள வேண்டும்?

Hutch வாடிக்கையாளர்கள் -1788 மற்றும் எடிசலாட் வாடிக்கையாளர்கள் -1722. காலப்பபோக்கில் இந்த சேவையும் ஒன்றிணைக்கப்படும்.