திரைப்பட டிக்கட்டை

திரையரங்குகளில் நீண்டநேர வரிசையில் காத்திருந்து டிக்கட் பெற்றுக்கொள்வதற்கு முற்றுப்புள்ளி வையுங்கள். உங்கள் கையடக்கத் தொலைபேசியை எடுத்து 365 என்ற இலக்கத்துக்கு டயல் செய்து திரைப்பட டிக்கட்டைகளை பதிவுசெய்து கொள்ளுங்கள்.

எவ்வாறு திரைப்பட டிக்கட்டை கொள்வனவு செய்வது?

365 என்ற இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்தி வாடிக்கையாளர் முகவரின் ஊடாக உங்கள் டிக்கட்டைக் கொள்வனவு செய்யுங்கள்

ஒரு நிமிட அழைப்புக்கான கட்டணம் எவ்வளவு?

ஒரு நிமிடத்துக்கு 8 ரூபா + வரி

டிக்கட் பதிவு செய்யும்போது வேறு ஏதாவது மேலதிக கட்டணங்கள் அறவிடப்படுமா?

டிக்கட் பெறுமதிக்கு மேலதிகமாக சேவைக் கட்டணமாக 50 ரூபா + வரி அறவிடப்படும்.

பதிவுசெய்ததை இரத்துச் செய்ய முடியுமா?

இல்லை

குறிப்பிட்ட நேரத்திற்குள் எத்தனை டிக்கட்டுக்களை கொள்வனவு செய்ய முடியும்?

10

எந்தெந்த திரையரங்குகளுக்கான டிக்கட்டுக்களைப் பதிவுசெய்ய முடியும்?

  • லிபேர்ட்டி – கொழும்பு 03
  • மஜஸ்டிக் சிட்டி சினி கொம்பிளக்ஸ் – கொழும்பு 04
  • றீகல் – கொழும்பு 02
  • றிக்கி 1 – கொழும்பு 02
  • புஞ்சி திரையரங்கு – பொரள்ளை
  • அரென – கடுகஸ்தோட்டை
  • சிகிரி – கடுகஸ்தோட்டை

எந்தவொரு Hutch வாடிக்கையாளரும் திரைப்பட டிக்கட்டை கொள்வனவு செய்ய முடியுமா?

உங்கள் கணக்கில் போதியளவு நிலுவை இருக்க வேண்டும்

எனது டிக்கட் பதிவை எவ்வாறு உறுதி செய்துகொள்வது?

உறுதிப்படுத்தும் குறுந்தகவல் உங்களுக்கு அனுப்பப்படும்

உறுதிப்படுத்தும் குருந்தகவலை திரையரங்கில் நான் காண்பிக்க வேண்டுமா?

திரையரங்கின் டிக்கட் வழங்கும் பகுதியில் உறுதிப்படுத்தல் குருந்தகவலைக் காண்பித்து டிக்கட்டைப் பெற்று உள்நுழையுங்கள்

எத்தனை மணிவரை டிக்கட் பதிவுகளை மேற்கொள்ள முடியும்?

குறித்த திரைப்படம் ஆரம்பிப்பதற்கு 90 நிமிடங்கள் முன் வரை பதிவுகளைச் செய்யலாம்

மற்றுமொரு Hutch இலக்கத்துக்காக எனது இலக்கத்திலிருந்து பதிவு செய்ய முடியுமா?

இல்லை, அழைப்பை ஏற்படுத்தும் இலக்கத்திற்கே பதிவுகளை மேற்கொள்ள முடியும்

பதிவுசெய்தமைக்கான குறிப்பு எண்ணை திரையரங்கில் காண்பிக்காவிட்டால் என்ன செய்வது?

365க்கு அழைப்பை ஏற்படுத்தி முறைப்பாடு செய்யுங்கள்

வெளியாகவிருக்கும் திரைப்படத்துக்கான டிக்கட்டை பதிவுசெய்ய முடியுமா?

கணினி அமைப்பில் குறித்த படம் காணப்படுமாயின் முற்பதிவைச் செய்யலாம்

ஆசனங்களைத் தெரிவுசெய்வதற்கான சலுகைகள் உள்ளதா?

ஆம், வாடிக்கையாளர் சேவை முகவருடன் அழைத்துப் பேசும்போது ஆசனங்கள் பற்றி அறிந்துகொள்ளலாம்